மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை, இன்று பெங்களூருவில் கிழிந்த உடையுடன், கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்த்து கொண்டிருக்கிறார். அந்த பழம்பெரும் நடிகையின் பெயர் காஞ்சனா. சிவந்த மண், காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம், உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் உள்ளிட்ட 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் காஞ்சனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களின் மூலம் லட்ச லட்சமாய் சம்பாதித்தார். ஆனால் இப்போது பெங்களூருவில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்துக் கொண்டிருப்பதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.
பெங்களூருவின் புறநகர் பகுதியான எலகங்காவில் உள்ள கணேசா கோயிலுக்கு அருகில் வசித்து வரும் அவர் கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாராம். மஞ்சள் நிற பழைய நூல் புடவை, கிழிந்த ஜாக்கெட்டுடன் அந்த பகுதியை வலம் வரும் காஞ்சனா, ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படித்து முடித்து விட்டு ஏர் ஹோஸ்டஸ் பணியில் சேர்ந்தேபோதே ஜமீன் வீட்டு பெண் வேலைக்கு போவதா? என்று குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதாம். குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி நடிகையானவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் பலருக்கும் தெரியாத சமீபத்தில் சரோஜாதேவிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்பார் என திரையுலகை சேர்ந்த பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சரோஜாதேவியே நேரில் சென்று அழைத்தும் அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் காஞ்சனா தவிர்த்தார்.
இந்த நிலையில்தான் காஞ்சனா பற்றிய இந்த செய்தி வெளியாகியிருக்கிறது. தான் இப்போது படும் கஷ்டம் குறி்த்து காஞ்சனா அளி்த்துள்ள பேட்டியில், ஒருவர் நன்றாக வாழ்ந்ததை வெளிப்படுத்திக் கொள்வதில் பெருமைப்படலாம். எனது தற்போதைய வாழ்க்கையை வெளியுலகம் அறிந்து, ஐயோ... இப்படி ஆயிட்டாளே... என்று என் மீது இரக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நன்றாக வாழும் காலத்தில் தான் சம்பாதிப்பதை யாரையும் நம்பி ஒப்படைக்கக் கூடாது. அப்படி செய்தால் என்னை என்னைப்போலத்தான் கஷ்டப்பட வேண்டும். இது என் தலைவிதி. மகாராணி போல வாழ்ந்தவள் இன்று இப்படி அல்லாடறேன், என்று கூறியுள்ளார்.
திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் எத்தனையோபேர் காஞ்சனாவைப் போன்று கஷ்டத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் வீரியமுடனம் பேசும் நடிகர்களும், நடிகர் சங்கமும் இதுபோன்று கஷ்டப்படும் நட்சத்திரங்களுக்கு ஏதாவது உதவி செய்வார்களா? அல்லது கப்சிப்பென கண்களை மூடிக் கொண்டே இருந்து விடுவார்களா?